×

இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்தது ட்விட்டர் நிறுவனம்: வினய் பிரகாஷ் நியமனம்

டெல்லி: ட்விட்டரின் இந்தியப்பிரிவு குறைதீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷ் நியமிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், ஓ.டி.டி., எனப்படும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்த, புதிய விதிமுறைகளை மத்திய அரசு நடைமுறைபடுத்தியது. இதன்படி, பயனாளர்களின் குறைகளை தீர்க்க, உள்நாட்டு குறை தீர்ப்பு அதிகாரி மற்றும் தனி அதிகாரம் பெற்ற தொடர்பு அதிகாரி ஆகியோரை முழு நேரமாக நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த பதவிகளுக்கு ஆட்களை நியமிக்காமல், ட்விட்டர் இந்தியா நிறுவனம் காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் ட்விட்டரில் வெளியான சில பதிவுகள் குறித்து புகார் அளிக்க விருப்பிய வழக்கறிஞர் ஒருவர், குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்படாததை அறிந்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டுவிட்டர் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது.

இந்த வழக்கு சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்த போது, ட்விட்டர் இந்தியா தரப்பில் கூறப்பட்டதாவது:கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இடைக்கால தலைமை இணக்க அதிகாரியை நியமித்து உள்ளோம். இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியை, ஜூலை 10ல் நியமிக்க உள்ளோம். தனி அதிகாரம் பெற்ற தொடர்பு அதிகாரியை நியமிக்க இரண்டு வாரம் அவகாசம் வேண்டும். முதல் அறிக்கை, நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படும். மூன்று பதவிகளுக்கமான முழு நேர நிரந்தர அதிகாரிகளை நியமிக்க, எட்டு வாரங்கள் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

Tags : Twitter ,India ,Vinay Prakash , Twitter appoints grievance officer for India: Vinay Prakash appointed
× RELATED பொய்யில் உலக சாதனை முறியடிப்பு: சமாஜ்வாடி கடும் தாக்கு