பாகிஸ்தானுக்கு எதிராக 2வது ஒன்டே: 52 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. மழை காரணமாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 45.2 ஓவரில் 247 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பிலிப் சால்ட் 60, வின்ஸ் 56, லூயிஸ் கிரிகோரி 40 ரன் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 5, ஹரிஸ் ரவூப் 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான், 41 ஓவரில் 195 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷகில் 56 ரன், ஹசன் அலி 31 ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில், லூயிஸ் கிரிகோரி 3 ஒவர்டோன், பர்கின்சன், மெக்மூத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 52 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது. லூயிஸ் கிரிகோரி ஆட்டநாயகன் விருது பெற்றார். கடைசி போட்டி வரும் 13ம் தேதி நடக்கிறது.

Related Stories:

>