×

அருப்புக்கோட்டை அருகே 105 தெருக்களுக்கு அழகு தமிழ் பெயர்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் 105 தெருக்களுக்கு அழகிய தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி ஊராட்சியில் ஆத்திபட்டி, கட்டகஞ்சம்பட்டி, லட்சுமி நகர், நாராயணபுரம், ஜெயராம் நகர், என்ஜிஓ காலனி உள்ளது. இங்கு ஏராளமான தெருக்கள் உள்ளன. ஆனால், தெருக்களுக்கு பெயர் ஏதும் இல்லாமல் இருந்தது. வெளியூர்களிலிருந்து வரும் நபர்கள், போஸ்ட்மேன்கள் சிரமப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு ஆத்திபட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் தெருக்களுக்கு பெயர் வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, பெயர் இல்லாத தெருக்களுக்கு, தமிழ் மாதம், கிழமை, ஆறுகள், மலர்கள், காலங்கள் ஆகியவற்றின் பெயர்களை, 105 தெருக்களுக்கு தமிழ் பெயர்களாக சூட்டியுள்ளனர். மேலும் 50 தெருக்களுக்கு பெயர் சூட்டும் வேலை நடந்து வருகிறது. இந்த கிராம ஊராட்சியின் புதிய முயற்சிக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆத்திபட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கூறியதாவது: இந்த ஊராட்சியில் தெருக்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் தெருக்களுக்கு பெயர் இல்லாமல் இருந்தது. வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு விரிவாக்கப் பகுதிகளில் உள்ள முகவரி தெரியாது. அதனால் தமிழ் மாதங்கள், நதிகள், மலர்கள் பெயரை தெருக்களுக்கு பெயர்களாக வைத்துள்ளோம். 105 தெருக்களுக்கு பெயர் சூட்டி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களிலிருந்து வருபவர் ‘கூகுளில்’ தேடினால், இந்த தெருக்களின் முகவரியை எளிதாக கண்டுபிடிப்பதற்கான பணிகளையும் செய்து வருகிறோம், என்றார்.

Tags : Arapakota , Aruppukottai, 105 streets, Tamil names
× RELATED அருப்புக்கோட்டை அருகே கொரோனா...