×

தூத்துக்குடியில் சூறைக்காற்றில் மரங்கள் விழுந்தன: போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வதைத்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கும் நிலை இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. வெயில் அறவே இல்லாத நிலையில் 10 மணிக்கு மேல் பலத்த சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக நகரில் அனைத்து சாலைகளிலும் பெரும் புழுதி மண்டலம் பல அடி உயரத்திற்கு உருவானது. இதனால் சாலையோர கடைகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் பலத்த கடற்காற்று காரணமாக மீன் பிடிக்க சென்ற பல விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கரைக்கு திரும்பின. நகரில் போக்குவரத்து போலீசார் வைத்திருந்த இரும்பு பேரிகார்டுகள் சூறைக்காற்றில் சாய்ந்தன. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் பகுதியில்  பழமை வாய்ந்த இரு வேப்பமரங்கள் அடுத்தடுத்து சாய்ந்தன. இதனால் பாளை ரோட்டில் அந்த மரங்கள் விழுந்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு மீட்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் அந்த பகுதி வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Thoothukudi , Trees fell in storm in Thoothukudi: Traffic damage
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...