கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பெண் பழனியில் பாலியல் கொடுமைக்கு ஆளானது குறித்து தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி கடிதம்..!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பெண் பழனியில் பாலியல் கொடுமைக்கு ஆளானது குறித்து டிஜிபி கடிதம் எழுதியுள்ளார். கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 வயது பெண் தன்னை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனது கணவருடன் கடந்த 19-ம் தேதி பழனி சென்ற போது, 3 பேர் கடத்தி விடுதியில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் என புகார் தெரிவித்தார். தேடி வந்த கணவரை அடித்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் கொடுமை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

விடுதியில் இருந்து தப்பி வந்து கணவருடன் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் தந்த புகார் மறுக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெண் தகவல் தெரிவித்துள்ளார். பெண் பாலியல் கொடுமை புகார் குறித்து கேரள டிஜிபி அணில்காந்த் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கேரள பெண் பாலியல் வன்கொடுமை புகார் சம்பவம் உண்மையல்லை என பழனி போலீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

கேரள போலீஸ் விசாரணைக்குப் பின் பழனி விடுதியில் சிசிடிவி காட்சிகளை வைத்து அடிவாரம் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More
>