×

திண்டுக்கல்- பழநி சாலையேரம் மணல் குவியலால் அடிக்கடி விபத்து: அகற்ற கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல்- பழநி செல்லும் சாலையில் முருகபவனத்தில் இருந்து பழநி பைபாஸ் சாலை வரை குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வளவு போக்குவரத்து அதிகளவு உள்ள இச்சாலையின் ஓரங்களில் மணல் முறையாக அப்புறப்படுத்தாமல் குவியல், குவியலாக கிடக்கிறது. சில இடங்களில் சாலையோரம் சுமார் 5 அடி அளவிற்கு மணல் குவியல் பரவி கிடக்கிறது.

இதனால் டூவீலர்களில் செல்வோர் மணலில் சறுக்கி காயமடைவது அடிக்கடி நடந்து வருகிறது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘பழநி சாலையில் ஆங்காங்கே மணல் குவியல் கிடப்பதால் டூவீலர்களில் செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு கனரக வாகனம் செல்லும் போது அதன் வேகத்தில் மணல் காற்றில் பறந்து வாகனஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Dindigul-Palani , Frequent accident due to sand pile on Dindigul-Palani road: Removal request
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து