தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. தேனியில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறினார்.

இது தவிர பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் இன்று பலத்த காற்று மணிக்கு சுமார் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களில் அந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Stories:

>