தமிழ்நாட்டை கூறுபோட்டால் அது தமிழினத்துக்கு பெரும் கேடாக முடியும்: டிடிவி தினகரன் ட்வீட்

சென்னை: தமிழ்நாட்டை கூறுபோட்டால் அது தமிழினத்துக்கு பெரும் கேடாக முடியும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை ஒன்றிய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை  தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது  தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். எனவே, வெள்ளைக்காரர்களைப்  போல பிரித்தாளும் சூழ்ச்சியைக்  கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும் எனவும் கூறினார்.

Related Stories:

More
>