×

3வது இந்திய வம்சாவளி பெண்ணாக சாதிக்கிறார் சிரிஷா இன்று விண்வெளி பயணம்: விர்ஜின் கேலக்டிக் விண்கலத்தில் பறக்கிறார்

ஹூஸ்டன்: விர்ஜின் கேலக்டிக் விண்கலம் மூலம் இந்திய வம்சாவளி பெண் இன்ஜினியர் இன்று விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த சிரிஷா பந்தலா (34 வயது), அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வளர்ந்தவர். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரான இவர், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் யூனிட்டி விண்கலம் மூலம் இன்று விண்வெளி பயணத் தை மேற்கொள்ள உள்ளார்.

விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.  இதற்காக முதல் முறையாக முழு அளவில் மனிதர்களை ஏற்றிக் கொண்டு கேலக்டிக் விண்கலம் இன்று விண்வெளிக்கு புறப்பட உள்ளது. இதில் நிறுவன உரிமையாளரான பிரான்சனுடன், சிரிஷா உட்பட 6 பேர் பயணிக்க உள்ளனர். நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து விண்கலம் புறப்பட உள்ளது. இதன் மூலம் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளியில் கால்பதிக்கும் மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை சிரிஷா பெற உள்ளார்.

* ‘விர்ஜின் கேலக்டிக்டி’யின் இரட்டை விமானங்களுக்கு மத்தியில் யூனிட்டி-22 விண்கலம் பொருத்தப்பட்டுள்ளது.
* உடனடியாக, யூனிட்டி விண்கலத்தில் உள்ள ஹைபிரிட் ராக்கெட் மோட்டார் இயங்கத் தொடங்கி, விண்வெளி நோக்கி பயணத்தை தொடங்கும்.
* 50,000 அடி உயர இலக்கை இரட்டை விமானங்கள் அடைந்ததும், அங்கிருந்து யூனிட்டி விண்கலம் விடுவிக்கப்படும்.
* இந்த விண்கலம் மூலம் அடுத்தாண்டு விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்.
* அங்கிருந்து 80 கிமீ உயரத்தில் புவிஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளியில் விண்கலம் நுழையும்.
* அதில் செல்பவர்கள் அங்கிருந்தபடி பூமியை ரசிப்பார்கள். பின்னர், மீண்டும் விண்கலம் பூமிக்கு திரும்பும்.
* கட்டணம் ஒருவருக்கு ரூ.1.8 கோடி.



Tags : Sirisha ,Virgin ,Galactic , Achieves 3rd Indian descent woman Sirisha space travel today: Virgin flies on a galactic spacecraft
× RELATED கன்னி