ஆஸ்திரேலியாவுடன் முதல் டி20 வெ.இண்டீஸ் அபார வெற்றி

செயின்ட் லூசியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 18 ரன் வித்தியாசத்தில் வென்றது.வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.  எல்லா ஆட்டங்களும் செயின்ட் லூசியாவில் நடைபெறுகின்றன.முதல் டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற  ஆஸி. முதலில் பந்துவீச...  வெ.இண்டீஸ்  20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்தது.  அந்த அணியில் அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸ்ஸல் 51* ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்)  விளாசினார். லெண்டில் சிம்மன்ஸ் 27, ஹெட்மயர் 20, கேப்டன் பூரன் 17 ரன் எடுத்தனர். ஆஸி.  தரப்பில் ஜோஷ் ஹேசல்வுட் 3, மிட்செல் மார்ஷ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

தொடர்ந்து 20 ஓவரில் 146 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி,  16 ஓவரில் 127 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸி. தரப்பில் மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 51 ரன் (31 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். மேத்யூ வேடு 33 ரன் (14 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஹென்ரிக்ஸ் 16, டேன் கிறிஸ்டியன் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். வெ.இண்டீஸ் தரப்பில் ஆட்ட நாயகன் விருது பெற்ற   ஒபெத் மெக்காய் 4, ஹேடன் வால்ஷ் 3, பேபியன் ஆலன் 2, ரஸ்ஸல் 1 விக்கெட் வீழ்த்தினர். வெ.இண்டீஸ் 18 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 ஆட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 5.00 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

Related Stories:

>