×

ராஜ்நாத் 70வது பிறந்தநாள்: மோடி வாழ்த்து

புதுடெல்லி: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தனது 70வது பிறந்தாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டரில், `அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு மிக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிர்வாகியாகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர்.

அனைவருடனும் பழகும் தன்மை, ஆளுமை, அறிவு ஆகிய பண்புகளால் அனைத்து துறைகளை சேர்ந்தவர்களையும் தன்பால் ஈர்க்க கூடியவர். நாட்டு பணியாற்றிட அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், நல்ல உடல்நலத்தையும் தர பிரார்த்திக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் ஜேபி. நட்டா உள்பட தலைவர்கள், அரசியல் கட்சியினரும் ராஜ்நாத் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



Tags : Rajnath ,Modi , Rajnath's 70th Birthday: Congratulations to Modi
× RELATED மாநிலங்களவை தேர்தலில் பாஜகவின்...