உருப்படியான திட்டங்கள் இல்லை வடகிழக்கு மாநில கவுன்சில் வேஸ்ட்: அருணாச்சல் முதல்வர் குற்றச்சாட்டு

இட்டாநகர்: `வடகிழக்கு மாநில கவுன்சிலிடம் வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்கான உறுதியான திட்டம் இல்லை,’ என்று அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு அதிருப்தி தெரிவித்துள்ளார்.வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் முன்னேற்றத்துக்காக, ‘வடகிழக்கு மாநில கவுன்சில்’ உருவாக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் செயலாளர் மோசஸ் சலாயை அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு நேற்று சந்தித்து பேசினார்.

பின்னர், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரதமர்  மோடி தலைமையில் வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் மாற்றம் நிகழும் என்று உறுதியாக இருந்தோம். ஆனால், வடகிழக்கு மாநில கவுன்சில், ஒன்றிய அரசிடம் இருந்து நிதி பெற்று தரும் அமைப்பாக மட்டுமே செயல்படுகிறது. இது ஆலோசனை கூட்டங்களை நடத்திய போதிலும், வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்கான உருப்படியான திட்டம் எதையும் செயல்படுத்தப்படவில்லை. பிராந்திய அளவில் சிந்தித்து, வடகிழக்கு மாநிலங்களின் முக்கிய தேவை என்ன என்பதை அறிந்து அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். இக்கவுன்சிலின் செயலாளர் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவராக இருப்பதால், தனிப்பட்ட அக்கறை எடுத்து வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்க உழைக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

Related Stories:

>