×

60,000 கி.மீ நீளத்திற்கு உலக தரத்திலான தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க இலக்கு: நிதின் கட்கரி

டெல்லி: 2024ஆம் ஆண்டுக்குள் 60,000 கி.மீ நீளத்திற்கு உலக தரத்திலான தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க இலக்கு வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாலை மேம்பாடு என்னும் தலைப்பிலான மாநாட்டில் உரையாற்றிய நிதின் கட்கரி 63 லட்சம் கி.மீ சாலை கட்டமைப்புடன் உலகில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு குறிப்பிடத்தக்க பங்காற்றுவதாகவும் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்காக அரசு 105 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு நாளைக்கு 40 கி.மீ எனும் அளவில் 60,000 கி.மீ நீளத்திற்கு உலக தரத்திலான தேசிய நெடுஞ்சாலை அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.

Tags : Nidin Kadkari , nitin gadkari
× RELATED மோடியே மீண்டும் பிரதமராவார்: நிதின் கட்கரி