காரியாபட்டி 6வது வார்டில் வாறுகால் தூர்வாரும் பணி

காரியாபட்டி : காரியாபட்டியில் வாறுகால் தூர் வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.காரியாபட்டியில் மழை பெய்தால் பேரூராட்சியின் 11,12,13வது வார்டுகள் மற்றும் மெயின் ரோட்டில் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீருடன் கலந்து செல்லும். வாறுகால் அரசு பெண்கள் பள்ளி, யூனியன் அலுவலகம் பின்புறம் வழியாக செல்கிறது. இந்த வாறுகால் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மிகவும் குறுகியதாக உள்ளதால் கழிவுநீர் செல்வதில் சிக்கல் எழுந்தது.

30 ஆண்டுகளுக்கு மேலாக வாறுகால் தூர்வாரப்படவில்லை. இதனால், வாறுகாலில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. எனவே வாறுகாலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிய பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் வாறுகாலை தூர்வார நடவடிக்கை எடுத்தார். ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் அரை கி.மீ தூரம் வாறுகால் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

இது குறித்து செயல் அலுவலர் கூறுகையில், ‘வாறுகால் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் வாறுகால் கட்ட திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அரைகுறையாக நிற்கும் வளர்ச்சி பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories:

>