மார்க்கெட் சாலையில் உடைந்த குடிநீர் குழாயை மாற்றி பதிக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி : மார்க்கெட் சாலையில் உடைந்த குடிநீர் குழாயை மாற்றி பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியாற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் அம்பராம்பாளையம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பிரதான குழாய் மூலம் நகராட்சி பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. இதில், காந்தி மார்க்கெட் அருகே உள்ள நீருந்து நிலையத்திலிருந்து, நகராட்சிக்குடப்ட்ட மேல்நிலை தொட்டிகளுக்கு அனுப்பும் பணி அவ்வப்போது நடக்கிறது.

 இதில், நேற்று முன்தினம் மாலையில் நீருந்து நிலையத்திலிருந்து மேல்நிலை தொட்டிக்கு கொண்டு செல்வதற்காக தண்ணீர் திறந்தபோது, அழுத்தம் தாங்காமல் மார்க்கெட் சாலை பிரிவில் உள்ள பிரதான குழாய் உடைந்து சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஆயிரகணக்ககான லிட்டர் குடிநீர் வீணானது.  இதையறிந்த நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டதுடன், குழாயை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  

இதில் நேற்று இரண்டவாது நாளாக குழாய் மாற்றியமைக்கும் பணி நடைபெற்றது. சுமார் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 5அடிக்கு மேல் பதிக்கப்பட்ட உடைந்த குழாயை அப்புறப்படுத்தி புதிய குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. இருப்பினும், வருங்காலங்களில் மேலும் உடைப்பு ஏற்படாமல் இருக்க தரமான குடிநீர் குழாயை பதிக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>