கொடைக்கானலில் அடுக்குமாடி பார்க்கிங்-சீசன் காலத்தில் வாகன நெரிசலை குறைக்க திட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் மல்டி லெவல் பார்க்கிங் அமையவுள்ள இடங்களை ஆர்டிஓ முருகேசன் நேற்று ஆய்வு செய்தார்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு இ-பாஸ், இ-பதிவு இல்லாமல் சுற்றுலாப்பயணிகள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு கடந்த ஜூலை 5ம் தேதியன்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர். பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கூட்டம் அதிகமாக கூடியதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கருதி, திறக்கப்பட்ட சுற்றுலா இடங்கள் கலெக்டரின் உத்தரவுப்படி ஜூலை 7 முதல் மீண்டும் மூடப்பட்டன.

ஆனாலும், இ-பாஸ், இ-பதிவு இல்லாததால், கொடைக்கானல் நகருக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் வருகின்றன. சீசன் காலங்களில் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும். கொடைக்கானல் நகர் பகுதியில் வாகன நிறுத்துமிடம் இல்லாததால், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக நகரிலுள்ள வெவ்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பல வருடங்களுக்கு முன்னர் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான இடத்தில், மல்டிலெவல் (அடுக்குமாடி) வாகன நிறுத்துமிடம் அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல வருடங்களாக இத்திட்டம் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது மீண்டும் வாகன நிறுத்துமிடம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

கொடைக்கானல் ஆர்டிஓ முருகேசன் தலைமையிலான குழுவினர் அரசு போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான பகுதிகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கலையரங்கம் பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடம் ஆகியவற்றை நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தாசில்தார் சந்திரன், உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் உட்பட அதிகாரிகள் இருந்தனர். ஆர்டிஓ முருகேசன் கூறுகையில், ‘‘இரண்டு இடங்கள் குறித்தும் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதை தொடர்ந்து விரைவில் வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்

றார்.

Related Stories:

>