மின்னல் தாக்கி மாடு பலி

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த கோளப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ரவி, கால்நடை விவசாயி. இவர் நேற்று தனது வீட்டின் முன் 2 வண்டி மாடு, 4 கறவை மாடுகளை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 2 பசுமாடு, ஒரு வண்டி மாடு ஆகியவை சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் சுரேஷ், விஏஓ ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மின்னல் தாக்கி 3 மாடுகள் இறந்த சம்பவம் கிராம பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாடுகளின் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் இருக்குமென தெரிகிறது.

Related Stories:

>