மரக்கன்றுகள் நடும் வார விழா

பள்ளிப்பட்டு: சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் வாரவிழாவை பாலாபுரம் ஊராட்சியில் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ நேற்று தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சியில் நாட்டின் 75வது சுந்திர தின விழாவை முன்னிட்டு ஒன்றிய அரசின் சாலையோர மரக்கன்றுகள் நடும் வார விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஏ.வி.தென்னரசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வரும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

Related Stories:

>