×

போக்குவரத்து கழகங்களில் பாகுபாடு வேண்டாமே?....ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களிடத்தில் அரசியல் ரீதியாக பாகுபாடு காட்ட கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் சார்பு நிலை கொண்டவையாக இருக்கலாம். ஆனால், அரசாங்கம் அனைவருக்கும் பொதுவானது. போக்குவரத்து கழகங்களும் பொதுவானவை. அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் தான் போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு உழைப்பவர்கள்.

 அவர்களிடம் அரசியல் ரீதியாக பாகுபாடு காட்டப்பட்டால் அது போக்குவரத்து கழகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்காது, மாறாக ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களை வீழ்ச்சி பாதையில்தான் இழுத்து செல்லும். எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களில் அனைத்து பணியாளர்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும். அவர்களை பழிவாங்காமல் அவர்களின் பணியை அமைதியாகவும், நிம்மதியாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும். அதன்மூலம் தொழிலாளர்களும், போக்குவரத்து கழகங்களும் வளர வகை செய்ய வேண்டும்.

Tags : Ramadas , Transport Corporation, Discrimination, Ramadas
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண்...