கோவில்பட்டி அதிமுக கூட்டத்தில் பரபரப்பு இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரையும் கட்சியை விட்டு நீக்க தீர்மானம்

கோவில்பட்டி: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்க தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவதென கோவில்பட்டியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் ஆறுமுக பாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் செண்பகராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில், ‘அதிமுக பொதுசெயலாளராக சசிகலா தொடர்ந்து நீடிக்க வேண்டும், அவரது தலைமையில் அதிமுக இயங்க வேண்டும், சசிகலா அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசி மூலம் உரையாடி வரும் சூழலில் அவருடன் பேசும் தொண்டர்கள், நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் செயலை வன்மையாக கண்டிப்பது, கட்சி அடிப்படை விதிகளுக்கு மாறாக தொடர்ந்து இதே நிலை நீடித்தால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>