பிரதமர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மயிலாடுதுறையில் நேற்று அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி 12 மூத்த அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து, புதுமுகங்களை சேர்த்துள்ளார். இந்த மாற்றம் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மோடி அரசு, திறம்பட செயல்பட்டிருந்தால் கொரோனாவை முதல் அலையிலேயே கட்டுப்படுத்தியிருக்கலாம். பொருளாதாரம் அதால பாதாளத்துக்கு சென்றிருக்கிறது.இதற்கெல்லாம் முழு பொறுப்பேற்க வேண்டியவர் மோடி. சில அமைச்சர்களை மாற்றி விட்டு அவர்கள் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்ள மோடி நினைக்கிறார். இதற்கு பதிலாக பிரதமர் மோடி பதவியை ராஜினாமா செய்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும் என்றார்.

Related Stories:

>