×

நீட்தேர்வு அறிமுகப்படுத்திய பிறகு மருத்துவ படிப்பில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது: ஏ.கே.ராஜன் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

திருச்சி: நீட்தேர்வு அறிமுகப்படுத்திய பிறகு மருத்துவ படிப்பில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக ஏ.ேக.ராஜன் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.  மருத்துவ படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு என்ற அடிப்படையில் ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. இந்த நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவு கேள்விகுறியாகும் என்று கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.   நீட் தேர்வு தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களின் கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவித்தது. அதன்படி, 80 ஆயிரம் பேர் தங்களின் கருத்துகளை பதிவு செய்து இருந்தனர். இந்த கருத்துகளை ஆய்வு செய்து நீட் தேர்வு அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஏ.கே.ராஜன் கமிட்டி ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள  மாணவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அமல்படுத்தப்பட்டு  முன்பும், பின்பும் தமிழ்நாட்டில் இருந்து எத்தனை பேர் மருத்துவ படிப்பில்  சேர்ந்து உள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேருக்கு நீட் தேர்வு  அமல்படுத்தப்பட்ட பின்பு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது என்பது  தொடர்பாக பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்திய பிறகு மருத்துவ படிப்பில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக ஏ.ேக.ராஜன் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நீட் ேதர்வு அமல்படுத்தபடுவதற்கு முன்பாக மருத்துவ படிப்பில் சேர்ந்த மொத்த மாணவர்களில் சராசரியாக 30 சதவீதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களாக இருந்தனர்.

ஆனால் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்பு இந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட இந்த 4 ஆண்டுகளில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே முதல் தலைமுறை மாணவர்கள் ஆகும். பொதுமக்கள் மற்றும் குழுவில் உள்ள பல்வேறு உறுப்பினர் அளித்த தகவல்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ெபாதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் அளித்த தகவல்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும் பணி இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : AK Rajan Group , நீட் தேர்வு, மருத்துவ படிப்பு, மாணவர், ஏ.கே.ராஜன் குழு, அதிர்ச்சி
× RELATED ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கு...