×

தொலைதூர சட்ட படிப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைக்கு அனுமதி இல்லை: உயர் நீதிமன்றத்தில் யுஜிசி விளக்கம்

சென்னை: தொலைதூர கல்வி மூலம் சட்ட படிப்பை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி மூலம் மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளை நடத்த  தடை கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. மனுவில், இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

 இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக்கல்வி மூலம் சட்ட படிப்பை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது,  இந்திய பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான வக்கீல், தொலைதூர கல்வியில் சட்ட படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என்று விளக்கமளித்தார்.

பல்கலைக்கழக மானிய குழு சார்பில் ஆஜரான வக்கீல், தொலைதூர கல்வி மூலம் சட்ட படிப்பை வழங்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Annamalai University ,UGC , Distance Law Studies, Annamalai University, High Court, UGC Interpretation
× RELATED சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!