பூரி ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழா தொடக்கம்

புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை திருவிழா கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் நேற்று தொடங்கியது.  ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழா மிகவும் பிரபலமானது. வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் லட்சக்கணக்கில் இதில் கலந்து கொள்வார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி தேர் திருவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் தேர் திருவிழா நேற்று தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு பூரி நகருக்குள் யாரும் நுழையாத வகையில்,  நாளை  இரவு 8 மணி முதல் 13ம் தேதி காலை 8 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories:

>