×

தகவல் பாதுகாப்பு சட்டம் அமலாகும் வரை தனியுரிமை கொள்கையை கட்டாயப்படுத்த மாட்டோம்: உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் உறுதி

புதுடெல்லி: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வாட்ஸ் அப் சமூக வலைதளம், சமீபத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான, தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, பயனாளர்களின் தகவல்கள் பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டிஎன். பட்டேல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ் அப் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே, ‘புதிய தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை, புதிய தனியுரிமை கொள்கையை வாட்ஸ் அப் நிறுவனம் நிறுத்தி வைக்கிறது. இந்த கொள்கையை ஏற்க வேண்டும் என பயனாளர்களை கட்டாயப்படுத்தாது. இதனை ஏற்காதவர்களுக்கு வழங்கப்படும் சேவையும் குறைக்கப்படாது,’ என தெரிவித்தார்.

Tags : WhatsApp , Information Security Act, Privacy Policy, High Court, WhatsApp
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...