ரயில் விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: ரயில்வே போலீசாருக்கு ஐஜி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ரயில்வே தண்டவாளங்களை  கடக்கும் போது ரயில் மோதி இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து  வருகின்றன. எனவே உயிரிழப்புகளை தடுக்க ரயில்வே போலீசார் பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு  ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் அவ்வப்போது உயிரிழப்புகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே அவற்றை முற்றிலும் தடுக்க தமிழக ரயில்வே போலீஸ் ஐஜி சுமித்  சரண் நேற்று போலீஸ் அதிகாரிகளுடன் ஆன்லைனில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை  மண்டல எஸ்.பி தீபா சத்தியம், டி.எஸ்.பி ஸ்டீபன், சென்னை சென்ட்ரல்  இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோர் கலந்து ெகாண்டனர்.

அப்போது ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.ஜி சுமித் சரண் கூறுகையில் : ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுவது மட்டுமின்றி விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தண்டவாளங்களை பாதுகாப்பற்ற முறையில் கடக்க கூடாது என பொதுமக்கள் மத்தியில்  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>