ஒரே நாளில் சவரன் 280 குறைந்தது தங்கம் விலையில் திடீர் சரிவு மாத இறுதியில் உயரும்

சென்னை: தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் அதிரடியாக விலை உயர்ந்தால், ஒன்றிரண்டு நாட்களில் அதே வேகத்தில் தங்கம் விலை குறைவதுமாகவும் இருந்து வருகிறது. நேற்று காலையில் தங்கம் விலை ஏறிய அதே வேகத்தில் குறைந்தது. கிராமுக்கு 30 குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,520க்கும், சவரனுக்கு 240 குறைந்து ஒரு சவரன் 36,160க்கும் விற்கப்பட்டது.

மாலையில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. அதாவது நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 35 குறைந்து ஒரு கிராம் 4,515க்கும், சவரனுக்கு 280 குறைந்து ஒரு சவரன் 36,120க்கும் விற்கப்பட்டது.சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் தான் காணப்படும். இந்த நேரத்தில் தங்கம் வாங்குவது நல்லது. இந்த மாதம் இறுதியில் தங்கம் விலை உயர அதிகம் வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories:

>