கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மருத்துவமனை டீன் முத்துகுமார் துவக்கி வைத்தார். இதில், 10 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.இதுகுறித்து, டீன் முத்துகுமார் கூறுகையில், கடந்த ஜூலை 21ம் தேதி முதல், இளம் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடர்ந்து போடப்படுகிறது.

தற்போது கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 10 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை, 450 கர்ப்பிணிகளுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு,  பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. எனவே தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டு, நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளவேண்டும் என்றார்.

Related Stories:

>