காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

காஞ்சிபுரம் :நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டித்து காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்,டீசல், காஸ் சிலிண்டர், விலை உயர்வை கண்டித்து காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது. பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த வாகன ஓட்டிகள், சாலையில் சென்ற ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் என பலரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில், காஞ்சி நகர தலைவர் நாதன், மாவட்ட துணைத் தலைவர்கள் மணிகண்டன், தாரன், பரந்தூர் சங்கர் உள்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>