×

கொரோனா பரவல் குறைவு எதிரொலி: அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி..! ஹரியானா அரசு உத்தரவு

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததையடுத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்த உத்தரவை ஹரியானா மாநில பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 16ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ஜூலை 23ல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் குறித்து பின்னர் முடிவு செய்து அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்த நடைபெறும், தொடர்ந்து ஆன்லைன் மூலம் படிக்க விரும்பும் மாணவர்கள் அவ்வாறு படிக்க அனுமதிக்கப்படுவார்கள். பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெற்று வந்தால்தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பள்ளிகளின் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள எந்த மாணவருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட மாட்டாது, என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஹரியானாவில் இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 10 பேர் உயிரிழந்துள்ளனர். 1034 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags : Haryana Government , Echoes of declining corona spread: Government allows public and private schools to open ..! Order of the Government of Haryana
× RELATED 'தடுப்பூசி போடாத 15 - 18 வயதுள்ள...