யூரோ கால்பந்து ஃபைனலை காண இங்கிலாந்து ரசிகர்கள் ஆர்வம்!: ஆன்லைனில் கொள்ளை லாபத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை..ஒரு டிக்கெட்டுக்கு ரூ.3.50 லட்சம் கொடுக்கவும் தயார்..!!

லண்டன்: யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியை காண இங்கிலாந்து ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதால் தரகர்கள் ஆன்லைன் மூலமாக டிக்கெட்டை கொள்ளை லாபத்துக்கு விற்று வருகின்றனர். யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து - இத்தாலி அணிகள் மோதவுள்ளன. லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு போட்டி தொடங்க இருக்கிறது. இங்கிலாந்து அணி 55 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரிய டெட்டமைண்ட்டனன் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இதனால் சொந்த மண்ணில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியை காண இங்கிலாந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

ஃபைனலுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன. ஆனால் சில இடைத்தரகர்கள் மொத்தமாக டிக்கெட்டை வாங்கி அதனை ஆன்லைன் மூலமாக கொள்ளை லாபத்துக்கு விற்று வருகின்றனர். ஒரு டிக்கெட் விலை இந்திய மதிப்பில் மூன்றரை லட்சத்தில் இருந்து 4 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. கிட்டத்தட்ட 55 லட்சம் ரூபாய்க்கு மேல் இடைத்தரகர்கள் இந்த டிக்கெட்டுகளை விற்று லாபம் சம்பாத்திருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்வதற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. இருந்தாலும் தங்கள் அணி ஃபைனலில் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் எவ்வளவு விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக உள்ளது.

Related Stories:

>