×

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 20 கிலோ எடை குறைந்துவிட்டதாக தகவல் : நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் உடல் நலத்துடன் இருப்பதை பார்த்து மக்கள் நிம்மதி!!

பியாங்யாங் ; வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகும் நிலையில், அந்நாட்டின் நிறுவன தலைவரின் நினைவு தின நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று நேற்று அஞ்சலி செலுத்தினார். நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகி கிம் ஜாங் உன் அவர்களின் எடை 20 கிலோ குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர் மெலிந்து காணப்பட்டதை பார்த்து அந்நாட்டு மக்கள் வேதனை அடைந்து கண்ணீர் சிந்தினர்.இந்த நிலையில் அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவும் அந்நாட்டு நிறுவன தலைவரான கிம் சங்கின் 27வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தலைநகர் பியாங்யாங் நகரில் அவரது நினைவகம் அமைந்துள்ள அரண்மனைக்கு அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்துவதற்கு அணிவகுத்துச் சென்றனர்.

ராணுவ மரியாதையுடன் நினைவகம் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட அதிபர் கிம் ஜாங் உன், அங்கு வைக்கப்பட்டு இருந்த கிம் சங்கின் உருவச்சிலைக்கு பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து ராணுவ அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.வடகொரிய நிறுவன தலைவரின் உருவசிலைக்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அஞ்சலி செலுத்தினர். அரசு ஊழியர்கள், தனியார் துறையினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என மக்கள் திரண்டு உருவ சிலை முன்பு பூங்கொத்து கொடுத்து மரியாதை செலுத்தினர்.நினைவு தின நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜாங் உன் உடநலத்துடன் கலந்து கொண்டது வடகொரிய மக்களை நிம்மதி அடைய செய்துள்ளது.

Tags : Korean ,President ,Kim Jong Un , வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...