×

அமெரிக்காவில் இடிந்து விழுந்த 12 மாடி கட்டிடம்!: இடிபாடுகளில் இருந்து இதுவரை 54 உடல்கள் மீட்பு..தேடப்படும் 86 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் காணாமல் போன 86 பேரில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஃபுளோரிடா மாநிலத்தின் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று கடந்த ஜூன் 25ம் தேதி இடிந்து விழுந்தது. இதில் 54 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. விபத்து நடைபெற்று 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் காணாமல் போன 86 பேரில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு படையினர் ஒன்று கூடி உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை தேடும் பணி கைவிடப்பட்டுவிட்டதாக அமெரிக்க மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சடலங்களை மீட்கும் நடவடிக்கை தொடரும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். விபத்துக்குள்ளான 12 மாடி கட்டிடம் அண்மையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : America , USA, 12 storey building, 54 bodies recovered, 86 fatalities
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!