ஆவடியில் நில மோசடி புகார் - பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

ஆவடி: ஆவடியில் வெங்கட்நாராயணன் என்பவரிடம் நிலம் அபகரித்த புகாரில் பாஜக பிரமுகர் ரமணன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர் ரமணன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கட்நாராயணன் அவரது மனைவி நித்யாவை கட்டிவைத்து மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வெங்கட்நாராயணன் தீக்குளிக்க முயன்றதை அடுத்து ரமணன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

 நேற்று சென்னை காவலர் அலுவலகத்தில் திடீரென ஒரு நபர் தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனடியாக காவலர்கள் அவரை பிடித்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரை பிடித்து விசாரணை செய்ததில் ஆவடியை சேர்ந்த வெங்கட்நாராயணா என்பது தெரியவந்தது. அவரும் அவரது மனைவி விஜயாவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நில அபகரிப்பு தொடர்பான புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தொடர்ந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் ஆவடியை சேர்ந்த வெங்கட்நாராயணா என்பவரின் 16 ஏக்கர் நிலம் திருவள்ளூர் வயலாநல்லூரில் இருக்கிறது. அந்த நிலத்தை பாஜக பிரமுகரான ரமணன் என்பவரும் உடன் விக்னேஷ், சதிஷ் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து கத்திமுனையில் சொத்துக்களை அபகரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தொடர்ந்து வெங்கட்நாராயணா தெரிவித்ததன் அடிப்படையில் இன்று ஆவடி போலீசார் அதுதொடர்பாக விசாரணை நடத்தி அந்த 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்கடத்தல், கொலைமிரட்டல், நிலத்தை அபகரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பாஜக பிரமுகர் ரமணன் உட்பட 4 பேர் மீது இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக இந்த 4 பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: