பெரியார், காமராஜர், அண்ணாமலை பல்கலை.கள் மீது முறைகேடு புகார்!: விசாரணை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் பதவி உயர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வந்த புகார்கள் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் மதுரை காமராஜன் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் பதவி உயர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அரசுக்கு புகார் மனுக்கள் வந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய உயர்கல்வித்துறை துணை செயலாளர் சங்கீதா ஐ.ஏ.எஸ். மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான அரசு இணை செயலாளர் ம.இளங்கோ தாஸ் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த குழு தனது விசாரணை அறிக்கையை 3 மாதங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்கும் என்று தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>