×

கொரோனா தடுப்பூசி போட்டால் தான் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குள் அனுமதி : தடுப்பூசி போட ஊக்கப்பரிசு வழங்கி ஊக்குவிக்கும் மனில் அரசு!!

இட்டாநகர் : அருணாச்சலப்பிரதேசத்திற்குள் நுழைய கொரோனா தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க அருணாச்சல அரசு 3 வியூகங்களில் செயல் திட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது.கொரோனா பரிசோதனைகளை அதிகரித்து தொற்று பரவலை கண்டறிதல், தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவது, மக்களின் பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மூலம் கொரோனாவை முற்றிலும் அகற்ற அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தயங்குவோரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில், ஊக்கப்பரிசு வழங்குவதையும் அருணாச்சல பிரதேச அரசு செயல்படுத்தி வருகிறது.அதன்படி, சுவன்ஸ்ரீ மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தலா 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இதே போன்று அசாம், மேகாலயா, மணிப்பூர் மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவோரை ஊக்குவிக்க ரொக்கப் பணமும் வழங்கப்படுகிறது. வியபாரிகள், வர்த்தக வாகனங்களை இயக்குவோர் தடுப்பூசி போட்டுக் கொண்டதை வெளிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.இதனை அறிந்த பின்னரே வாடிக்கையாளர்களின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Arunachal Pradesh , அருணாச்சலப்பிரதேசம்
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...