×

வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தொழில் முதலீட்டுக்கழக பணி சிறப்பாக உள்ளது: அமைச்சர் பேச்சு

சென்னை: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ் நாட்டில் உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதி தேவைகளை அறிந்து அதனை சீராகப் பூர்த்தி செய்துவரும் ஒரு முன்னோடி மாநில நிதி நிறுவனம் ஆகும்.  இக்கழகம் தமிழகமெங்குமுள்ள குறு மற்றும் சிறு நிறுவனங்களின் கடன் தேவையினைப் பூர்த்தி செய்திடும் பொருட்டு குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிடும் நிதிதொழில்நுட்ப  நிறுவனங்களுக்கு என்று ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் லெண்டிங் கார்ட் பைனான்ஸ் லிமிடெட் எனும் நிதிதொழில்நுட்ப நிறுவனத்திற்கு ரூ.10 கோடிக்கானக் காலக் கடனை இக்கழகம் அனுமதித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அந்நிறுவனத்திற்கானக் கடன் தொகையான ரூ.10 கோடிக்கான கடன் அனுமதி ஆணையை நேற்று வழங்கினார். பின்னர் தொழில்துறை அமைச்சர் கூறும்போது: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தமிழகத்தின் பரவலான தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும் சிறப்பானப் பணி செய்து வருகிறது.  காலத்திற்கேற்றவாறு மாறிவரும் தொழில்நுட்ப  வளர்ச்சியினை உள்வாங்கி வரும் ஐந்தாண்டுகளில் ரூ.7500 கோடி கடன் நிலுவைத்தொகை அடைந்திடும் வகையில் மிகப்பெரிய வளர்ச்சியினை நோக்கி செயல்படுகின்ற வேளையில் அதற்குத் தேவையான உதவிகளைத் தமிழக அரசு செய்துதரும் என்றார்.

Tags : Business Investment Corporation , Employment, Business Investment Institute Work, Minister
× RELATED தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்...