தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி ஒருவர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர்-கடம்பத்தூர்  இடையே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் நேற்று ரயில் மோதி இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த நபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>