×

அடித்து உதைத்து எழுதி வாங்கிக்கொண்டார் பாஜக பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்: பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி

சென்னை: அடித்து வலுக்கட்டாயமாக நிலத்தை எழுதி வாங்கி கொண்ட பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நிலத்தின் உரிமையாளர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக 3வது நுழைவாயில் முன்பு நேற்று ஒரு நபர் ஒருவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் கையில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்த நபர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். பின்னர் அவரை வேப்பேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், ஆவடி லாசர் தெருவை சேர்ந்த வெங்கட் நாராயணன் (42) என்று தெரியவந்தது. இவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய அந்த பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் எம்.ஆர்.ரமணன் மற்றும் சட்டக்கல்லூரி மாணவன் விக்னேஷ் ஆகியோரிடம் கூறியுள்ளார். அதன்படி நிலத்தை விற்பனை செய்வதற்கான முழு உரிமமும் சதீஷ்குமார் என்பவரின் பெயரில் எழுதி வாங்கியுள்ளனர். ஆனால் சொன்னப்படி நிலத்தை விற்பனை செய்யாமல் ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்து நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெங்கட் நாராயணன் புகார் அளித்தார். தங்கள் மீது புகார் அளித்ததை தெரிந்து கொண்ட பாஜ பிரமுகர் மற்றும் சட்டக்கல்லூரி மாணவன் ஆகியோர் வீடு புகுந்து நாராயணன் மற்றும் அவரது மனைவியை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக இவர்களின் நிலத்தை டெல்லி என்பவருக்கு விற்றுவிட்டதாக எழுதி வாங்கியுள்ளனர். அதற்கான பணத்தையும் கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த வெங்கட் நாராயணன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : BJP , BJP leader, land grab, complaint, attempt to set fire
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...