வெ.இண்டீஸ்-ஆஸி. இடையே டி20 தொடர் இன்று ஆரம்பம்

செயின்ட் லூசியா: வெஸ்ட்இண்டீஸ்-ஆஸ்திரேலியா இடையே இன்று தொடங்கும் டி20 தொடரில் முதல் ஆட்டம் செயின்ட் லூசியாவில் நடக்கிறது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அங்கு 5 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.  டி20 தொடர்  ஜூலை 9, 10, 12, 14, 16 தேதிகளில் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சம்மி அரங்கில் நடக்கும். ஒருநாள் தொடர் ஜூலை 20, 22, 24 தேதிகளில் பார்படாசில் உள்ள  கென்சிங்டன் அரங்கில் நடைபெறும். நியூசிலாந்துக்கு எதராக மார்ச் மாதம் முடிந்த கிரிக்கெட் தொடருக்கு பிறகு 3 மாதங்கள் கழித்து ஆஸி இன்று களம் காணுகிறது.

ஆஸி சொந்த மண்ணில் இந்தியாவிடம் டி20, டெஸ்ட் தொடர்களையும், நியூசிலாந்திடம் டி20 தொடரையம் இழந்தபிறகு வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது. அதேபோல் வெ.இண்டீஸ் அணியும் சமீபத்தில் சொந்தமண்ணில் தென் ஆப்ரிக்காவிடம் டெஸ்ட், டி20 தொடர்களை இழந்து இருக்கிறது. எனவே 2 அணிகளுக்கும்  வெற்றி முக்கியம். அதனால்  இன்று (இந்திய நேரப்படி நாளை காலை 5மணிக்கு) தொடங்கும் ஆட்டத்தில்  பொல்லார்டு தலைமையிலான வெ.இண்டீஸ் அணியும், ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸி அணியும் வெற்றிக்கு மல்லுக்கட்டும். அதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Related Stories:

>