போட்டி நிறுவனங்களை நசுக்கும் முயற்சி 36 அமெரிக்க மாகாணங்கள் கூகுள் நிறுவனம் மீது வழக்கு

வாஷிங்டன்: டிஜிட்டல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தி, போட்டி சந்தையை சட்டவிரோத முடக்க நினைப்பதாக கூகுள் நிறுவனம் மீது 36 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப உலகமே டிஜிட்டல் மயமத்திற்கு மாறி வருகிறது. நவீன உலகில் தற்போது அனைத்தும் செல்போனில் இயக்கும் வகையில் பல்வேறு ஆப்கள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு உருவாக்கப்படும் ஆப்களை, கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் அதை உருவாக்கியவர்கள் விற்பனை செய்வார்கள். இந்த ஆப்களை பயனாளர்கள் பதவிறக்கம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு நடக்கும் ஒவ்வொரு பரிவத்தனைகளுக்கு இடைத்தரகராக செயல்பட்டு 30% கமிஷனாக கூகுள் நிறுவனம் வசூலித்து வருகிறது.

இது போட்டி சந்தையில் வசூலிக்கப்படுவதை பல மடங்கு அதிகம். கூகுள் நிறுவனம் போட்டி சந்தைக்கு இடம் கொடுப்பதில்லை. போட்டி நிறுவனங்கள் செயல்பட கூகுள் நிறுவனம் முட்டுக்கட்டை போடுவதால் சந்தை மதிப்பு கணிசமான குறைக்கிறது. புதுமைகளும் முடக்கப்படுகிறது. இதுவரை, இணையதளத்தை கையில் வைத்திருந்த கூகுள் நிறுவனம், தற்போது டிஜிட்டலிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால், ஆண்ட்ராய்டு சாதன பயனாளர்கள் வலுவான  போட்டியை இழந்து விட்டனர். இதுதொடர்பாக, ஏற்கனவே கூகுள் மீது  அமெரிக்காவில் பிரச்னை எழுப்பப்பட்டது.

இந்த விவகாரம் பூதாகரமானதால், இந்த தொழில் ஆதிக்கத்தை தடுப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மீறி தற்போது  கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, கூகுளின் சட்ட விரோத ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், லட்சக்கணக்கான நுகர்வோர் மற்றும் வணிக உரிமையாளர்களை பாதுகாக்கவும் 36 அமெரிக்க மாகாண அரசுகளும், வாஷிங்டன் சார்பிலும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் மற்றும் உட்டா, வட கரோலினா மற்றும் டென்னசி ஆகியவற்றின் அட்டர்னி ஜெனரல் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்து உள்ளனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories: