ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் வீசி தாக்குதல்

பாக்தாத்: ஈராக்கில் அமெரிக்க தூதரகம் உள்ள பகுதியில் தீவிரவாதிகள் ராக்கெட் வீசி  தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில், ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அப்போது முதல், ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாக்தாத்தில்  பசுமை மண்டலத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நேற்று காலை தீவிரவாதிகள் 2 அதிநவீன  ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல்,  ஐன் அல்-ஆசாத் விமானத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர்.

Related Stories:

>