தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி: எம்பி, எம்எல்ஏ வழங்கினர்

செய்யூர்: செய்யூர் வட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக அரசின் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை சார்பில், திருமணமாகவுள்ள பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமணமான பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. இதையொட்டி, செய்யூர் தொகுதி மக்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி லத்தூர் ஒன்றிய அலுவலகத்தில்  நேற்று நடந்தது. எம்பி செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 44 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளை வழங்கினர்.

 

லத்தூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பாபு, மாவட்ட துணை செயலாளர்கள் வெளிக்காடு ஏழுமலை, தசரதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் பார்வேந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பூமகள்தேவி, ஜெயபால், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, லத்தூர் சமூக விரிவாக்க அலுவலர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் 70 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது. இதில் சித்தாமூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் ஏழுமலை, சிற்றரசு, முன்னாள் ஒன்றிய செயலாளர் தனசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, ஞானபிரகாசம், வட்டார சமூக அலுவலர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>