ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் பாஸனோர்ஸ் நிறுவனத்தின் மூலம் மெக்கானிக்கல் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் இறுதியாண்டு படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு, நேர்முக தேர்வு, உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவற்றின் மூலம், 75 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு பெற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்ட மாணவ - மாணவிகளை பாராட்டி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் தமிழ்வேந்தன், துறை தலைவர்கள் வெங்கடசுப்பிரமணியம், செந்தில்குமார், இளங்கோவன், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் சதீஷ், மேலாளர் பட்டு, நிர்வாக அலுவலர் அரிகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>