×

எல்.முருகனுக்கு தமிழிசை வாழ்த்து

சென்னை: தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: நம் பாரத திருநாட்டை உலக அரங்கில் பீடு நடைபோடுவதற்கும், அனைத்துத் தரப்பினரையும், அதிக எண்ணிக்கையில் மகளிரையும் உள்ளடக்கிய இந்த அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags : Murugan ,Tamil Nadu , Tamil music greetings to L. Murugan
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...