பொள்ளாச்சி பாலியல் வழக்கு அதிமுக செயலாளர் அருளானந்தம் ஜாமீன் மனு தள்ளுபடி

கோவை : பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு உட்பட 5 பேர் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் (34) ஹேரன்பால் (29) பாபு (27) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த 3 பேரும் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை மகளிர் கோர்ட்டில் அருளானந்தம் ஆன்லைன் மூலமாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று  நீதிபதி நந்தினிதேவி விசாரித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

>