மேகதாது அணையை கட்ட செயல் திட்டம்: அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான செயல்திட்டத்தை தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: கர்நாடக மாநில அரசை பொறுத்தவரை மேகதாது அணை கட்டும் திட்டம் மகத்துவமானது. அதில், எத்தனை தடை வந்தாலும் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இதற்காக எத்தனை சட்ட போராட்டங்களை சந்திக்கவும் அரசு தயாராக உள்ளது. மேகதாது அணை என்பது மாநில விவசாயிகளின் உயிர் மூச்சு, வாழ்வாதாரம், மாநிலத்தின் வளர்ச்சிக்கான ஊன்றுகோல் இப்படி பல பரிணாமங்களை இத்திட்டம் பெற்றுள்ளது. மேகதாது அணை கட்டுமான பணிகள் தொடர்பாக நிபுணர்களுடன் இவ்வார இறுதியில் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளார். அதற்குள் அணை கட்டுவது தொடர்பான செயல்திட்டத்தை உருவாக்கும்படி அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு அவர்  உத்தரவிட்டுள்ளார். வல்லுனர் குழு அறிக்கை கொடுத்தபின், முதல்வர் தலைமையில்  நடக்கும் கூட்டத்தில் கட்டுமான பணி தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>