திருப்பதி ஏழுமலையான் 13, 16ம் தேதி தரிசனம் ஆன்லைனில் முன்பதிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 13 மற்றும் 16ம் தேதிகளில் சுவாமியை தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேவஸ்தான இணையதள முகவரியான //www.tirupatibalaji.ap.gov.in/ சென்று தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இந்த இரு தினங்களை தவிர்த்து 1ம் தேதி முதல் 31ம் தேதி வரைக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த இரு தினங்களுக்கான டிக்கெட்டுகளையும் தேவஸ்தானம் இன்று காலை 9 மணிக்கு ஆன்ைலனில் வெளியிடுகிறது. இது தவிர திருப்பதியில் உள்ள மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரைக்கான அறைகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>