×

கொரோனா பரவல்: கட்டுப்படுத்த உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..! 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

டெல்லி: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது இது தொடர்பாக அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கேரளா, அசாம், மேகாலயா, திரிபுரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில அரசுகளுக்கு , சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். நாட்டில் மொத்தம் 73 மாவட்டங்களில் அதிகபட்சமாக 10 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிப்புகள் உள்ளன. நாட்டின் 73 மாவட்டங்களில் 46 மாவட்டங்கள் வட மாநிலங்களை சேர்ந்தவை.

ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில்கூறியதாவது; நாட்டில், தினசரி கொரோனா  பாதிப்பு குறைந்து வந்தாலும், வாரந்தோறும் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், தொற்று பரவும் வேகத்தின் அறிகுறியையும் கண்காணிக்க வேண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவது முக்கியம். தொற்றை கட்டுப்படுத்துவதற்கு , தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Tags : Corona spread: Strict action should be taken immediately to control ..! Federal Government Letter to 8 States
× RELATED மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில்...