×

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் கால் இறுதி போட்டிகள் நேற்று நடந்தது. இதில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-3, 6-4, 6.4 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் மார்டன் புசோவிக்சை வீழ்த்தினார். கனடாவின் டெனிஸ் ஷாபோலோவ், 6-4, 3-6, 5-7, 6-1, 6-4 என ரஷ்யாவின் கரேன் கச்சனோவ்வை வெளியேற்றினார். 7ம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, 6-3, 5-7, 7-5, 6-3 என கனடாவின் பெலிக்சை சாய்த்தார். முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 3-6, 6-7, 0-6 என 24 வயதான போலந்தின் ஹூபர்ட் ஹர்காசிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். 40 வயதான பெடரரால் 3வது செட்டில் ஒரு புள்ளி கூட எடுக்க முடியவில்லை. ஹூபர்ட் இதுவரை எந்த தொடரிலும் 3வது சுற்றை தாண்டியதில்லை. முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

நாளை நடக்கும் அரையிறுதியில், ஜோகோவிச்- டெனிஸ் ஷாபோலோவ், ஹூபர்ட் ஹர்காஸ்-மேட்டியோ பெரெட்டினி மோதுகின்றனர். மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் இன்று மாலை 6 மணிக்கு ஆஷ்லீ பார்டி-கெர்பர், இரவு 7.30 மணிக்கு சபலென்கா-பிளிஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் சானியா மிர்சா, போபண்ணா ஜோடி, 3-6, 6-3, 9-11 என ஸ்லோவினியாவின் க்ளெ்பாஸ்-நெதர்லாந்தின் ரோஜர் ஜோடியிடம் வீழ்ந்து வெளியேறியது. இதுவரை ஆடவர் ஒற்றையரில் ரபேல்நடால், ரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸை நேற்றைய போட்டியில் பெடரர் வென்று, தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிபோட்டியிலும் வென்றிருந்தால் நடாலின் சாதனையை முறியடித்து 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெயரை பெற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Wimbledon ,Federer , Wimbledon tennis: Federer's shock defeat in the quarterfinals
× RELATED விம்பிள்டன் இறுதிப்போட்டியில்...